மாற்றுத்திறனாளிகள் பாராட்டு மழையில் விழுப்புரம் கலெக்டர்

மாற்றுத்திறனாளிகள் பாராட்டு மழையில் விழுப்புரம் கலெக்டர்
X

மாற்றுதிறனாளியின் பத்து வருட கோரிக்கையை பத்து நிமிடத்தில் நிறைவேற்றிய கலெக்டர்

மாற்றுத்திறனாளியின் பத்து வருட கோரிக்கையை பத்து நிமிடத்தில் நிறைவேற்றிய விழுப்புரம் கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு பணிக்கு சென்று கொண்டு இருந்தார், அப்போது வழியில் ஆட்சியரக பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலில் சிரமப்பட்டு தவழ்ந்து சென்ற மாற்றுத்திறனாளியை கண்டார்.

உடனடியாக தான் சென்று கொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கி அவரிடம் கருணையுடன் விசாரித்தார். அப்போது கடந்த 10 ஆண்டுகாலமாக தொடர்ந்து மூன்று சக்கர சைக்கிள் கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை என அந்த மாற்றுத்திறனாளி கூறியுள்ளார்.

உடனடியாக சம்மந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்து, அவருக்கு அந்த இடத்திலேயே 10 நிமிடத்தில் மூன்று சக்கர சைக்கிளை ஆட்சியர் மோகன் வழங்கினார். இதனால் அந்த மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்து சென்றார்.

மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் அங்கு கூடியிருந்த பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் மாற்றுத்திறனாளியின் 10ஆண்டு கோரிக்கையை 10 நிமிடத்தில் நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர் மோகன் தற்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது