விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம்

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம்
X

விழுப்புரத்தில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான சுயம்வரம்

விழுப்புரத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 8 ஆம் ஆண்டு சுயம்வர நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாற்றுதிறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் பி.சிம்மசந்திரன் தலைமை தாங்கினார்,

முன்னதாக மாநில துணைத்தலைவர் எஸ்.பழனி அனைவரையும் வரவேற்று பேசினார், நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேல், மாநில பொதுச்செயலாளர் த.பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சுயம்வரம் குறித்து சிறப்புரையாற்றினர்,

தொடர்ந்து நிகழ்ச்சியில் ஆண் பெண் மாற்றுதிறனாளிகளிடம் வாழ்க்கை குறித்த கேள்விகள் கேட்டு சுயம்வரத்தை நடத்தினர், சுயம்வரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஐ.சக்திவேல் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!