அமைச்சரிடம் பள்ளி கட்டிடம் கேட்டு மாணவர்கள் கோரிக்கை

அமைச்சரிடம்  பள்ளி கட்டிடம் கேட்டு மாணவர்கள் கோரிக்கை
X

அமைச்சரிடம் மனு அளித்த பள்ளி மாணவ, மாணவிகள்.

திண்டிவனம் அருகே உள்ள பகுதியைச் சார்ந்த மாணவ மாணவிகள் தங்கள் படிப்பதற்கு பள்ளி கட்டிடம் கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் மோகனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக இருந்த நிலையில் தற்போது 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் இப்பள்ளியில் ஒரேஒரு வகுப்பறை மட்டும்தான் உள்ளது. அந்த வகுப்பறையும் மிகவும் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. கடந்த மழையின்போது இப்பள்ளி கட்டிடம் மேலும் சேதமடைந்துள்ளதால் மாணவ- மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதனால் பக்கத்து வீட்டில் உள்ள மாட்டுக்கொட்டகைகளிலும், குடியிருப்புகளிலும், வீட்டின் வளாகங்களிலும் அமர்ந்து பாடம் கற்பித்து வருகிறோம்.

புதிய கட்டிடம் வேண்டும் மேலும் இப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் கிடையாது. சமையல் கூடம் இல்லாததால் சுகாதாரமற்ற முறையில் திறந்தவெளியில் சமையல் செய்து தருகின்றனர். இதுதவிர விளையாட்டு மைதானம், கழிப்பிட வசதி இப்படி எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே மாவட்ட கலெக்டர் இப்பள்ளியை நேரில் ஆய்வு மேற்கொண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதோடு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடத்தை கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!