விழுப்புரத்தில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரத்தில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்
X

விழுப்புரத்தில் மதுபாட்டில் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பள்ளி தென்னல் பகுதியில் மது விலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர், அப்போது அவ்வழியே வந்த லோடுகேரியரை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் வாகனத்தில் 3 லட்சத்து, 88 ஆயிரம் மதிப்பிலான 7200 மதுபாட்டில்களை கடத்தி வந்த பிரவீன்குமார், ராஜ்குமார் ஆகிய இருவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து மதுபாட்டில்கள் மற்றும் லோடு கேரியரை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்