விழுப்புரத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

விழுப்புரத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
X

பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,விழுப்புரம் மாவட்டத்தில் 6 முதல் 19 வயதுடைய பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு மற்றும் ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு அலுவலர் லலிதா, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோகிலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தணிகைவேல் உட்பட மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil