விழுப்புரத்தில் பேனர்கள் அகற்றுவது குறித்து ஆய்வு கூட்டம்

விழுப்புரத்தில் பேனர்கள் அகற்றுவது குறித்து ஆய்வு கூட்டம்
X

பேனர்கள் அகற்றுவது குறித்து கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றுவது குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி ஊராட்சி பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றுவது குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது,

கூட்டத்தில் தலைமை தாங்கி கலெக்டர் பேசுகையில் வருகின்ற 20ம் தேதிக்குள் பேனர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தினந்தோறும் அகற்றும் பேனர்கள் நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ஸ்ரீ நாதா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!