விழுப்புரம்: போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைவர் எம்.பழமலை தலைமை தாங்கினார், பொருளாளர் பி.சேஷையன், மாநில நிர்வாகக்குழு வி.சின்னராசு, ஆர்.பலராமன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக்குழுவை சேர்ந்த டி.கலியமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில துணைச்செயலாளர் ஏ.சகாதேவன் தொடக்கவுரையாற்றினர்.
பொதுச்செயலாளர் ஜி.ராமசந்திரன் பங்கேற்று, 2015 ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய 70 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும்; மருத்துவப்பணியை ரூ.300 ஆக உயர்த்தவேண்டும்; 2020 முதல் விருப்ப ஓய்வு, பணியில் மரணம் அடைந்த குடும்பத்திற்கு பணபலனை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரி செயலாளர் ஆர்.தமிழ்வாணன், உபகிளை தலைவர் ஆர்.கலியமூர்த்தி உட்பட, சுமார் 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu