விழுப்புரத்தில் குடியரசு தின விழா பற்றி கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை

விழுப்புரத்தில் குடியரசு தின விழா பற்றி கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை
X

குடியரசு தினவிழா கொண்டாட்டம் பற்றி அனைத்து துறை அதிகாரிகளுடன் விழுப்புரம் கலெக்டர் மோகன் ஆலோசனை நடத்தினார்.

விழுப்புரத்தில் 26 ந்தேதி குடியரசு தின விழா கொண்டாட்டம் பற்றி அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

விழுப்புரத்தில் வருகின்ற 26 ந்தேதி குடியரசு தின விழா நடக்கவுள்ளது, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் ஆலோசனை நடத்தினாா்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், ஆட்சியா் மோகன் தலைமை தாங்கி பேசுகையில் விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் குடியரசு தின விழா வருகிற 26-ஆம் ந்தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, மைதானத்தை சீரமைக்கும் பணி, மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் குறித்தும், கரோனா தொற்றால் பாதிப்பு ஏற்படாத வகையில், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல் பாதுகாப்புப் பணி, குடிநீா் வசதி, தற்காலிக கழிப்பிடம் அமைப்பது, மைதானத்தை சுற்றி அலங்கரித்தல், மருத்துவக் குழுவினா் அடங்கிய மருத்துவ முகாம் அமைத்தல், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் மைதானத்தின் அருகே மருத்துவ வசதி ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து அனைத்துத் துறை அலுவலா்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலா்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை சிறப்புடன் மேற்கொண்டு குடியரசு தின விழா நடக்கவேண்டும் என்றாா் ஆட்சியா் மோகன்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ர.சங்கா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கே.பி.எஸ்.தேவராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மோகன், விழுப்புரம் கோட்டாட்சியா் ஹரிதாஸ் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் உட்பட பலர் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!