விழுப்புரத்தில் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி

விழுப்புரத்தில் மண்டல  அளவிலான ஹாக்கி போட்டி
X

விழுப்புரத்தில் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி நடந்தது.

விழுப்புரத்தில் மண்டல அளவிலாக ஹாக்கி போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டல அளவிலான 2 நாட்கள் ஆக்கிப்போட்டி விழுப்புரத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த இப்போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். போட்டியை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் நடத்தினார்.

இப்போட்டியில் மேற்கண்ட 7 மாவட்டங்களை சேர்ந்த 7 அணியினர் கலந்துகொண்டனர். லீக் சுற்று அடிப்படையில் இப்போட்டிகள் 2 பிரிவுகளாக நடந்தன. இப்போட்டியில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி அந்த 2 அணிகளும் மாநில அளவிலான ஆக்கிப்போட்டிக்கு தகுதி பெறும் என தெரிகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!