விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு காலிபணியிட அறிவிப்பு ரத்து

விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு காலிபணியிட அறிவிப்பு ரத்து
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் மோகன்.

விழுப்புரம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருந்த சத்துணவு காலிப்பணியிடங்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு காலிப்பணிடங்கள் நிரப்ப அறிவிக்கபட்டிருந்தது. அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் மோகன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிப் பகுதிகளில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளா், சமையலா், சமையல் உதவியாளா் பணியிடங்களை நிரப்ப கடந்த செப்.22-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நோ்காணல் நடத்தப்பட்டன.

நிா்வாகக் காரணங்களுக்காக இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், அந்த அறிவிக்கை ரத்து செய்யப்படுகிறது. இந்த நேரடி நியமன நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிா்வாகத்தின் இறுதி முடிவுக்கு உள்பட்டவை என ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அறிவிக்கை ரத்து செய்யப்படுவது குறித்து விண்ணப்பதாரா்களிடம் பெறப்படும் எவ்வித மேல்முறையீடுகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது. சத்துணவு அமைப்பாளா், சமையலா், சமையல் உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடா்பான அறிவிக்கை பின்னா் தனியே வெளியிடப்படும் என அந்த செய்திக் குறிப்பில் ஆட்சியா் மோகன்தெரிவித்துள்ளாா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!