விழுப்புரம் மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம்
X

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம், விழுப்புரத்தில் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியின் முதன்மை செயலருமான ஹர் சகாய் மீனா தலைமை தாங்கினார். விழுப்புரம் கலெக்டர் த.மோகன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!