விழுப்புரத்தில் தடுப்பூசி முகாமை எம்எல்ஏ லட்சுமணன் தொடங்கி வைத்தார்

விழுப்புரத்தில் தடுப்பூசி முகாமை எம்எல்ஏ  லட்சுமணன் தொடங்கி வைத்தார்
X

விழுப்புரத்தில் தடுப்பூசி முகாமை எம்எல்ஏ லட்சுமணன் தொடங்கி வைத்தார்

விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாமை எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் தொடங்கி வைத்தார்

விழுப்புரத்தில் காங்கிரஸ் எஸ்.சி பிரிவு, திமுக மற்றும் விழுப்புரம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து விழுப்புரம் சரஸ்வதி திருமண மஹாலில் தடுப்பூசி முகாமை தொடங்கினர்.

விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி தொடங்கிவைத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.புஷ்பராஜ், விழுப்புரம் நகராட்சி ஆணையர் தக்ஷிணாமூர்த்தி, நகராட்சி மருத்துவ அலுவலர் டாக்டர்.பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாாமில் டாக்டர்.நிஷாந்த் குழுவினர் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனர். முகாம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் வி.டி.சி.சுரேஷ்ராம் செய்திருந்தார். முகாமில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Tags

Next Story