தொழில் தொடங்க மானியத்தில் கடன்உதவி: ஆட்சியர் மோகன் தகவல்
விழுப்புரம் கலெக்டர் மோகன்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் நடத்தும், சிறப்பு தொழிற் கடன் விழாவில், புதிய தொழில் முனைவோர்,தொழில் அதிபர்கள் 25 சதவீத மூலதன மானியம் மற்றும் 6 சதவீத வட்டி மானியத்துடன் கடனுதவி பெற்று, சுய தொழில் துவங்க மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்ய, வருகின்ற 18.08.2021 முதல் 27.08.2021 வரை 23-A, ரங்கநாதன் தெரு, ஹோட்டல் உட்லண்ஸ் காம்பளக்ஸ், முதல் மாடி, சென்னை - திருச்சி மெயின் ரோடு, விழுப்புரம் என்ற முகவரியில் உள்ள கிளை அலுவலகத்தில்,குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா நடைபெறுகிறது.
தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.50 இலட்சம் வரை வழங்கப்படும்.
இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். NEEDS திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர்,தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu