காந்தி ஜெயந்தி: காந்தி உருவப்படத்திற்கு கலெக்டர் மலர் தூவி மரியாதை

காந்தி ஜெயந்தி: காந்தி உருவப்படத்திற்கு கலெக்டர் மலர் தூவி மரியாதை
X

கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி திருவுருவ படத்திற்கு கலெக்டர் மோகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி திருவுருவ படத்திற்கு கலெக்டர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அண்ணல் காந்தியடிகளின் 153-வது பிறந்த நாளையொட்டி மாவட்ட கலெக்டர் த.மோகன் அங்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்,

அதனை தொடர்ந்து அங்கு அமைக்கபட்டிருந்த கதர் விற்பனையகத்தில் தீபாவளி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார், அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப.காந்தி, நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!