கழிவுநீர் ஓடையாக மாறிய ஏரி நீர் வரத்து வாய்க்காலை சரி செய்ய கலெக்டர் உத்தரவு

கழிவுநீர் ஓடையாக மாறிய ஏரி நீர் வரத்து வாய்க்காலை சரி செய்ய கலெக்டர் உத்தரவு
X

கழிவுநீர் ஓடையாக மாறிய ஏரி நீர் வரத்து வாய்க்காலை சரி செய்ய கலெக்டர் உத்தரவு

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள நரையூர் கிராம ஏரியின் நீர் வரத்து வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் புகார்

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட வளவனூர் அருகே உள்ள நரையூர் கிராமத்தில் உள்ள ஏரி நீர் வரத்து வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சுமார் 8 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் மோகன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடனடியாக ஏரி நீர் வரத்து வாய்க்காலில் கழிவு நீர் கலந்து வருவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டார்.

விழுப்பரம் மாவட்ட ஆட்சியரின் உடனடி நடவடிக்கைக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
why is ai important to the future