கொரோனா தொற்று குறித்து தீவிர விழிப்புணர்வு தேவை: கலெக்டர் மோகன்

கொரோனா தொற்று குறித்து தீவிர விழிப்புணர்வு தேவை: கலெக்டர் மோகன்
X

விழுப்புரத்தில்  கொரோனா தடுப்பு குறித்த கூட்டம் கலெக்டர்  மோகன் தலைமையில் நடைபெற்றது

விழுப்புரத்தில் மாவட்ட மக்கள் கொரோனா குறித்து அலட்சியமாக இருக்கவேண்டாம் என கொரோனா தடுப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறினார்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று கொரோனா தடுப்பு குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது

அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வினை பொதுமக்கள் அலட்சியத்தோடு பின்பற்றுகின்றனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் தீவிர விழிப்புணர்வு பிரச்சார பணியினை மாவட்டம் முழுவதும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழக அளவில் கர்ப்பிணி பெண்கள் கொரோனா நோய் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்வதில் விழுப்புரம் மாவட்டம் 100 சதவீதம் பூர்த்தி அடைந்திருக்கிறது என பெருமிதத்துடன் தெரிவித்தார், கூட்டத்தில் மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story