அரசு வேலை கேட்டு மாற்றுத்திறனாளி பெண் ஆட்சியரிடம் கோரிக்கை
அரசு வேலை கேட்டு கலெக்டரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுகா ஆ.கூடலூரை சேர்ந்தவர் முனியன் (வயது 38), கூலித்தொழிலாளி. இவர் தனது 2 குழந்தைகளுடனும் கால்கள் நடக்க இயலாத தனது மாற்றுத்திறனாளி மனைவி ஜோதியை (32) சுமந்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.
அந்த மனுவில் நான் கூலி வேலை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறேன். எனது மனைவி ஜோதி ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளார். எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் தமிழக அரசு, கருணை அடிப்படையில் எனது மனைவிக்கு வேலை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுபோல் எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் மோகன், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட மக்களின் குறைகளை போக்கும் வகையில் மாவட்ட குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் குறை சார்ந்த கோரிக்கைகளை மனுவாக்கி அதனை மாவட்ட ஆட்சியிடம் அளித்து நடவடிக்கையை எதிர்பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளும் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளிப்பதற்காக வாரம் தோறும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகின்றனர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கீழ் தளத்தில் இருக்கையில் ஏற்பாடு செய்து அவர்கள் அமர வைத்து நேரடியாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கே வந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கொடுத்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி வருகிறார்
இந்நிலையில் நேற்று ஆசிரியர் பயிற்சி படித்த மாற்றுத்திறனாளி மனைவியை சுமந்து வந்து மாவட்ட ஆட்சியர் மோகனிடம் கோரிக்கை மனு அளித்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேற்று தொடர்ந்து மழை பெய்த சூழ்நிலையிலும் மாற்றுத்திறனாளி மனைவியை சுமந்து வந்த அவரது கணவருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்
மேலும் அந்தப் பெண்ணிற்கு அரசு கருணை அடிப்படையில் அவரது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும், அ மனு கொடுக்க வரும் பொதுமக்கள் இது மாதிரியான இயற்கை இடர்பாடு காலத்தில் லுவலக வளாகத்தில்அமர்ந்து செல்லும் வகையில் தங்கும் கூடங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறினர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu