விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தாலுகா பள்ளிகுளம் வடக்கு தெருவை சேர்ந்த பூபாலன் மகன் மணிகண்டன் (வயது 37). மாற்றுத்திறனாளியான இவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக மூன்றுக்கர சைக்கிளில் வந்தார்.
கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு வந்த அவர், திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் விரைந்து சென்று மணிகண்டனை தடுத்து நிறுத்தி அவர் வைத்திருந்த பெட்ரோல் கேன், தீப்பெட்டியை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
அப்போது அவர்கூறுகையில், தனது தாத்தா குணசேகரன் பெயரில் உள்ள 2.88 ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை தனதுதந்தை பூபாலனின் பெயருக்கு மாற்றக்கோரி 20 ஆண்டுகளாக மனு அளித்து வருவதாகவும், பட்டா மாற்றம் செய்யாமல் அதிகாரிகள் ஆண்டுக்கணக்கில் அலைக்கழிப்பு செய்து வருவதால், மனவிரக்தியில் தீக்குளிக்க முயன்றதாக அவர் தெரிவித்தார்.
இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், இதுபோன்ற அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்றுக்கூறி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu