விழுப்புரத்தில் தீபாவளி கதர் விற்பனை தொடக்கம்
தீபாவளி முன்னிட்டு கதர் விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட வருவாய் அதிகாரி
தீபாவளி பண்டிகையையொட்டி கதர் துணிகள் சிறப்பு விற்பனையை மாவட்ட வருவாய் அதிகாரி பரமேஸ்வரி தொடங்கி வைத்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் கதர் துணிகள் சிறப்பு விற்பனை விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் காந்தியடிகளின் 154-வது பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி கலந்துகொண்டு காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி கதர் விற்பனையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடு ரூ.1 கோடியே 36 லட்சத்து 85 ஆயிரம் முழுமையாக எய்தப்பட்டது.
நடப்பாண்டு இம்மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 50 லட்சம் விற்பனை குறியீடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை எய்த வேண்டும். காதி கிராப்டில் இவ்வாண்டும் சிறப்பு விற்பனையாக கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ஆகிய ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கதர் ஆடைகளை வாங்கி கிராம நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி,தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று கூறினார் .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குனர் சீனிவாசன், கதர் ஆய்வாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இது மாதிரி பண்டிகை காலங்களில் மட்டுமே கதர் மற்றும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்களின் துணிக்கடைகள் இருப்பது மக்களின் ஒரு சில பேருக்கு தெரிய வருகிறது,மற்ற சமயங்களில் இந்த கடைகள் தனியார் கடைகளில் ஆதிக்கத்தினால் மறைக்கப்பட்டு மக்களுக்கு இக்கடைகளில் விற்கப்படும் தரமான துணி ரகங்கள் கிடைக்கப்பெறாமலேயே உள்ள நிலை நீடித்து வருகிறது,
அதனால் மாவட்டத்தில் உள்ள கதர் மற்றும் கோ ஆப்டெக்ஸ் துணிக்கடைகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்களின் மூலம் நகரம், பேரூராட்சி, நகராட்சி, கிராமப்புறங்களில் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும், மேலும் தனியார் துணிக்கடைகளுக்கு போட்டியாக கிராமப்புறங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் பொதுமக்களுக்கு கதர் விற்பனை யங்கள் தெரியவரும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். .
இதனை சம்பந்தப்பட்ட துறைகள் இனிவரும் காலங்களில் இது மாதிரி விழா காலங்களில் விற்பனை தொடக்கம் செய்வது போல் மற்ற காலங்களிலும் இந்த கடைகள் இருப்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை துண்டு பிரச்சுரகள் மூலம் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் கோரிக்கையாக எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu