கொரோனா விதிமுறைகள் இன்றி மதுக்கடையில் குவியும் கூட்டம்

கொரோனா விதிமுறைகள் இன்றி மதுக்கடையில் குவியும் கூட்டம்
X
விழுப்புரம் நகரத்தில் உள்ள மகாராஜபுரம் டாஸ்மாக்கில் மது வாங்குவதில் தள்ளுமுள்ளு , கொரோனா பயம் சிறிதும் இல்லாத குடிமகன்கள்.

விழுப்புரம் மகாராஜபுரம் அருகே உள்ள அனிச்சம் பாளையம் டாஸ்மாக் கடையில் எங்களுக்கு சமூக இடைவெளி பற்றியும் கவலை இல்லை, கொரோனா பற்றியும் கவலையில்லை, என மது பிரியர்கள் மது பாட்டில்கள் வாங்க கூட்டமாக திரண்டனர். இதனால் கடையில் கட்டுக்கடங்காத மது பிரியர்கள் வந்து கொண்டே இருந்தனர். இதில் வெளி மாநிலத்தவர் மதுபானம் வாங்க அதிக அளவில் வந்ததால் அங்கு ஏற்பட்ட மது வாங்கும் போட்டியால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, கொரானா வேகமாக பரவி வரும் நிலையில் இது மாதிரி சமூக இடைவெளி கடைபிடிக்காத பொது இடங்களில் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!