விழுப்புரம் மாவட்டத்தில் 24 லட்சம் பேர் தடுப்பூசி முகாமில் பயன்

விழுப்புரம் மாவட்டத்தில் 24 லட்சம் பேர் தடுப்பூசி முகாமில் பயன்
X
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 24 லட்சத்து, 67 ஆயிரத்து, 095 பேர் கொரோனா தடுப்பூசி போட்டு பயனடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் வேகமாக தடுப்பூசி போடப்பட்டு வருவதால், கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து,20 ஆயிரத்து,520 பேருக்கு கொரோனா மாதிரி எடுக்கப்பட்டுள்ளது, 28/12/2021, அன்று ஆயிரத்து,488 பேருக்கு மாதிரி எடுத்ததில், அதில் 5 பேருக்கு பாசிடிவ் உறுதியானது. இதன் மூலம், மாவட்டத்தில் பாசிடிவ் 0.34 சதவீதம் ஆகும். நேற்று புதன்கிழமை1004 பேருக்கு மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் இந்த வார பாசிடிவ் 0.33 சதவீதமாக உள்ளது.

மாவட்டத்தில், நேற்று கொரோனா வழக்கு ஏதும் பதியப்படவில்லை. இதுவரை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகள் மீறியதாக மொத்தம் 88 ஆயிரத்து,289 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இதுவரை ஒரு கோடியே, 91லட்சத்து,74ஆயிரத்து, 900 அபராதமாக வசூலிக்க பட்டுள்ளது. மாவட்டத்தில் 71 ஆயிரம் தடுப்பூசி இருப்பு உள்ளது. நேற்று 11,080பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதுவரை மாவட்டத்தில் 24 லட்சத்து,67 ஆயிரத்து ,095 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என மாவட்ட சுகாதாரத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!