விழுப்புரத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா டெஸ்ட்

விழுப்புரத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா டெஸ்ட்
X
வரும் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் சூழலில், விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணுமிடத்தில் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு, இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்து, வரும் 2 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனிடையே, கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணுமிடத்திற்கு செல்வோருக்கு, கொரோனா டெஸ்ட் கட்டாயம் என கூறியுள்ளது. இதையடுத்து, பல இடங்களில் கொரோனா டெஸ்ட் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சுகாதாரத்துறை மூலம், இன்று கொரோனா தொற்று பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட போகும் பணியாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோர் உட்பட, நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!