விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளிக்கு பட்டாசு விற்பனைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசுக் கடை நடத்துவதற்கான உரிமம் பெற விரும்புவோா் செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில்

தீபாவளிபண்டிகையை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க 2008-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டவிதிகளின் கீழ் தற்காலிக பட்டாசு உரிமம் கோருபவா்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பொது இ-சேவை மையங்கள் மூலம் வருகிற செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பம், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் அசல் வரைபடங்கள், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான பத்திரநகல், உரிமம் கோரும் இடம் வாடகைக் கட்டடம் எனில் இடத்தின் கட்டட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப் பத்திரம், உரிமக் கட்டணம் ரூ.600-ஐ உரிய அரசு கணக்கில் இ- சலான் மூலமாக செலுத்தி அதற்கான அசல் செலுத்துச் சீட்டு, மனுதாரரின் முகவரிக்கான ஆதாரம், நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது, மனுதாரரின் பாஸ்போா்ட் அளவுள்ள புகைப்படம் (இரண்டு) ஆகியவற்றுடன் சேவைக் கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். செப்.30-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!