கல்லூரியில் தூய்மை பணிகள்: கலெக்டர் மோகன் ஆய்வு

கல்லூரியில் தூய்மை பணிகள்: கலெக்டர் மோகன் ஆய்வு
X

விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மைப்பணிகள் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் திறக்கவுள்ள நிலையில் தூய்மைப்பணிகளை கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கபடவுள்ள நிலையில் விழுப்புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற 01.09.2021 முதல் மாணவியர்களுக்கான நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு வகுப்பறைகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

இந்த பணிகளை கலெக்டர் மோகன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ், கல்லூரி முதல்வர் கணேசன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்கொடி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது