விழுப்புரத்தில் நல்லாசிரியர் விருது: கலெக்டர் வழங்கினார்

விழுப்புரத்தில் நல்லாசிரியர் விருது: கலெக்டர் வழங்கினார்
X

விழுப்புரத்தில் நல்லாசிரியர் விருதுகளை வழங்கிய கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் விருதுகளை வழங்கினார்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பாக 2020-2021ஆம் கல்வி ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருதினை மாவட்ட கலெக்டர் த.மோகன், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பரியா, துணை ஆட்சியர் (பயிற்சி) ரூபினா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!