புதிய பேருந்து நிலைய கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்புப்பணி: கலெக்டர் ஆய்வு

புதிய பேருந்து நிலைய கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்புப்பணி: கலெக்டர் ஆய்வு
X

தூய்மைப்பணிகளை ஆய்வு செய்யும் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றுவரும் கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்புப்பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்

விழுப்புரம் நகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் தூய்மை வாரம் கடைப்பிடிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தூய்மை பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது,

ஏரியை தூர்த்து கட்டப்பட விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், எப்பொழுதெல்லாம் மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற முடியாமல் மழை நீர் தேங்கி பழைய நினைவுகளை வெளிப்படுத்தும் வகையில் ஏரி போல் காட்சி அளிக்கும்,

அப்போது பேருந்து பயணிகள் பெரும் சிரமமடைந்து வந்தனர், அதனை போக்கும் வகையில் தற்போது அப்பகுதியில் உள்ள கழிவுநீர் வெளியேறும் வாய்க்கால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை மாவட்ட கலெக்டர் த.மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது நகராட்சி தூய்மை பணியை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டார்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு