தென்பெண்ணை ஆற்றில் குளிக்க தடை: ஆட்சியர் அறிவிப்பு

தென்பெண்ணை ஆற்றில் குளிக்க தடை:  ஆட்சியர் அறிவிப்பு
X

மாவட்ட ஆட்சியர் மோகன்.

தென்பெண்ணை ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிக அளவு உள்ளதால் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனையடுத்து அணையிலிருந்து 3000 கன அடி உபரி நீர் கடந்த 5-ந்தேதி முதல் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆற்றின் வழியாக செல்கிறது.

மேற்படி தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிபெருக்கி மூலம் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிப்பது, பள்ளி மாணவ-மாணவிகள் செல்பி எடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!