மாற்றுத்திறனாளிகள் காப்பக மாணவர்களுக்கு அன்னதானம்

மாற்றுத்திறனாளிகள் காப்பக மாணவர்களுக்கு அன்னதானம்
X

எம்எல்ஏ லட்சுமணனின் பிறந்தநாளையொட்டி,  விழுப்புரத்தில் அவரது ஆதரவாளர்கள், காப்பக குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினர்.

விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ லட்சுமணனின் பிறந்தநாளையொட்டி, காப்பக குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழுப்புரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணனின் 49 வது பிறந்தநாள், இன்று அவரது ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, விழுப்புரம் நகர 30 வது வார்டு மகளிர் அணியை சேர்ந்த ஆசிரியர் ஷீலாஜெகன் தலைமையில், விழுப்புரம் நகர விவசாய அணி மற்றும் 30 வது வார்டு உறுப்பினர் ஏ.ஆர் ஜெகன் ஆகியோர், விழுப்புரம் இந்திரா நகரில் உள்ள ஜெயின் ஜான் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உணவளித்தனர்.

அதை தொடர்ந்து விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள ராமலிங்க அடிகளார் அருள் மாளிகையில் அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்வில், ஜெயின் ஜான் மாற்றுத்திறனாளிகள் காப்பக ஊழியர்கள் மற்றும் வள்ளலார் அருள் மாளிகை ஊழியர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்