விழுப்புரத்தில் அதிமுக பொன்விழா கொண்டாட்டம்

விழுப்புரத்தில் அதிமுக பொன்விழா கொண்டாட்டம்
X

அதிமுக பொன்விழா கொண்டாட்டம்

விழுப்புரத்தில் அதிமுக பொன்விழாவை கழக மாணவர் அணியினர் கொண்டாடினர்

விழுப்புரம் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆனதையடுத்து பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் காந்தி சிலை அருகே நடைபெற்ற விழாவிற்கு மாணவர் அணி மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார், விழாவில் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பசுபதி, திருப்பதி பாலாஜி, ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர். இதனையடுத்து ஏழை எளிய பொது மக்களுக்கு சேலை வழங்கி பொன்விழாவை கொண்டாடினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்