வெற்றி சான்றிதழ் அளிக்க தாமதம்: அதிமுக வேட்பாளர் தர்ணா

வெற்றி சான்றிதழ் அளிக்க தாமதம்: அதிமுக வேட்பாளர் தர்ணா
X

வெற்றி சான்றிதழ் கொடுக்க தாமதம் ஆனதால் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்

விழுப்புரத்தில் 23வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ் கொடுக்க தாமதப்படுத்தியதால் தர்ணாவில் ஈடுபட்டார்

விழுப்புரத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 23வது வார்டு அதிமுக வேட்பாளர் கோதண்டராமன் வெற்றி பெற்றார்.

அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்ற சான்றிதழ் கொடுக்க காலதாமதம் ஆனதால் வேட்பாளர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார், அதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

வெற்றி சான்றிதழ் வாங்க வேட்பாளரை உள்ளே அனுமதிக்காததால் அதிமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் வாக்கு எண்ணும் மையத்தில் திடீரென நுழைந்து தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,

உடனடியாக பணியில் இருந்த அலுவலர்கள் வெற்றிபெற்ற 23 வார்டு அதிமுக வேட்பாளரை உள்ளே இருக்கை அளித்து அமர வைத்தனர். இதனால் சிறிது நேரம் வாக்கு எண்ணும் மையத்தில் பதட்டம் ஏற்பட்டது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்