குலதெய்வம் கோயிலுக்கு சென்ற பெண் வேன் கவிழ்ந்ததில் உயிரிழப்பு

குலதெய்வம் கோயிலுக்கு சென்ற பெண் வேன் கவிழ்ந்ததில் உயிரிழப்பு
X

பைல் படம்.

நாகப்பட்டினம் அருகே குலதெய்வம் கோயிலுக்கு சென்ற பெண் விக்கிரவாண்டி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.

சென்னை பாடியை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ். இவர் உறவினர்கள் குழந்தைகள் உட்பட 19 பேருடன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மகழி கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் குலதெய்வ கோவிலுக்கு ஒரு வேன் மூலம் சென்று கொண்டிருந்தனர்.

வேனை முத்துசாமி என்பவர் ஓட்டி வந்தார், நேற்று இரவு விக்கிரவாண்டி வடக்கு புறவழிச் சாலையில் வரும் போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த சுந்தரி . 48 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வேனில் பயணம் செய்த அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து விக்கிரவாண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் அடிபட்டவர்களை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்,

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்