விழுப்புரம் நெல் கொள்முதல் நிலையங்களில் எம்எல்ஏ ஆய்வு

விழுப்புரம் நெல் கொள்முதல் நிலையங்களில் எம்எல்ஏ ஆய்வு
X
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காணைக் குப்பம், கல்பட்டு, பனமலைப்பேட்டை, முட்டத்தூர், கயத்தூர், குமளம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல் மூட்டைகள் தேங்கி இருந்தது.

இதை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளின் நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு உடனடியாக பணத்தையும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மண்டல மேலாளர் சீனா, உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture