விழுப்புரம் மருத்துவக்கல்லூரியில் ஆட்சியர் திடீர் ஆய்வு

ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற தகவலை அடுத்து, விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சில மருத்துவமனையிள் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக, தகவல் வெளியானது. இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது, மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்; மேலும் தினந்தோறும் ஆக்சிஜன் இருப்பு நிலவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என, அவர் அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து, மருத்துவத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!