விக்கிரவாண்டி பேரூராட்சியில் புதிய வரி கணக்கெடுப்பு

விக்கிரவாண்டி பேரூராட்சியில் புதிய வரி கணக்கெடுப்பு
X
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சியில் புதிய வரி விதிப்புக்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி பேரூராட்சியில் தமிழக அரசின் புதிய வரி விதிப்பு அமல்படுத்த அனைத்து கடை, மற்றும் வீடுகளை அளவீடு செய்து வரி விதிப்பு கணக்கீடு செய்து வருகின்றனர்.

இந்த பணியை கடலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன் திடீர் ஆய்வு செய்து அளவீடுகளையும், வரிகளையும் சரிபார்த்தார். ஆய்வின்போது பேரூராட்சி மன்றத் தலைவர் அப்துல் சலாம், செயல் அலுவலர் அண்ணாதுரை , இளநிலை உதவியாளர் ராஜேஷ்,வரி தண்டலர்கள் தண்டபாணி,ஜெயசீலி, கலைவாணி , துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!