விக்கிரவாண்டி அருகே கொத்தனார் இடம் பணம், செல்போன், வாகனம் அபேஸ்

விக்கிரவாண்டி அருகே கொத்தனார் இடம் பணம், செல்போன், வாகனம் அபேஸ்
X
விக்கிரவாண்டி சுங்க சாவடி அருகே கொத்தனாரிடம் பணம், செல்போன், வாகனத்தை பிடுங்கிக் கொண்டு ஓட்டம் எடுத்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி உஸ்மான் நகரை சேர்ந்தவர் சேக் உசேன்-வயது54 கொத்தனராக உள்ளார். இரவு வேலை செய்துவிட்டு தனது டிவிஎஸ் மோட்டார் சைக்கிளில் விக்கிரவாண்டி நோக்கிவந்து கொண்டிருந்தார்.

விக்கிரவாண்டி சுங்க ச்சாவடி கடந்து சுடுகாடு ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது, ஆற்றுப் பாலத்தின் அருகே இவருக்கு பின்னால் வந்த அடை யாளம் தெரியாத மூன்று நபர்கள் இவரை திடீரென வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்து பணம் ஆயிரம் ரூபாய், செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டு, இவரை பள்ளத்தை தள்ளிவிட்டு ஓடிவிட்டனர்.

இதுகுறித்து அவர் விக்கிரவாணடி போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!