உள்ளாட்சித்தேர்தல்: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

உள்ளாட்சித்தேர்தல்: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு
X

திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த அமைச்சர் சிவசங்கர்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அமைச்சர் வாக்கு சேகரித்தார்

உள்ளாட்சி தேர்தலில் விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மீனா வெங்கடேசன், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்தில் 21 வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கஸ்தூரி பாண்டியன் ஆகியோரை ஆதரித்து அமைச்சர் சிவசங்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது விழுப்புரம் மத்திய மாவட்ட கழக செயலாளரும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் ஏ.சிவா , விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெய.ரவிதுரை, மற்றும் கழக நிர்வாகிகள், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!