சேமிப்பு கிடங்கு அமைக்க காணை பகுதி விவசாயிகள் கோரிக்கை

சேமிப்பு கிடங்கு அமைக்க காணை பகுதி விவசாயிகள் கோரிக்கை
X

மாதிரி படம்

விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு மேலாளரிடம் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

நெல்லை கொள்முதல் செய்ய அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்தாலும், நெல் மூட்டைகள் உடனுக்குடன் அங்கிருந்து விழுப்புரத்தில் உள்ள சேமிப்பு குடோனுக்கு எடுத்து செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. பல நேரங்களில் திடீர் மழையில் நனைந்து வீணாகிறது, அதனால் நெல் கொள்முதல் தடைபடுவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

இதனை தடுக்கும் பொருட்டு உடனடியாக காணை பகுதியில் அரசு சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வானிப கழகத்தின் மேலாளரிடம் நாகராஜன் தலைமையில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Tags

Next Story
the future of ai in healthcare