/* */

விக்கிரவாண்டியில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விக்கிரவாண்டியில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனைக் கூட்டம்
X

வட்டாட்சிவிகிரவாண்டி யர் அலுவலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் கோட்டத்துக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலர்களுக்கான வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். விக்கிரவாண்டி மண்டல துணை வட்டாட்சியர் பாரதிதாசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்படும் இயற்கை பேரிடர் மற்றும் வெள்ள பாதிப்பு ஆகியவைகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர் ஆனந்தகுமார், கணேஷ், பாஸ்கர், ஆதிசக்தி சிவகுமாரி மன்னன், கோவர்த்தனன் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர்கள், பொதுப்பணி துறை அலுவலர்கள், தீயணைப்பு துறை அலுவலர்கள் மருத்துவ துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் சார்லின் நன்றி கூறினார்,

கடந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பல்வேறு இடர்பாடுகள் காரணமாக பலர் உயிரிழந்தனர், மேலும் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாமல் சில நாட்கள் பாதிப்பை ஏற்படுத்தியது, இதேபோன்று பல்வேறு இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கியது, மேலும் ஆறு குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிந்ததால் கரைகள் உடைந்து வெள்ள நீர் ஆங்காங்கே கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்கள் மற்றும் பயிர்களுக்கு பாதிக்கப்படும் நிலையை ஏற்படுத்தியது, அதனால் மாவட்டத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்,இது போன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டால் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் வெள்ள அபாய நிலையில் இருந்து மக்களை பாதுகாப்பதோடு அவர்களை மீட்டெடுக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் முனைப்பாக செயல்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள நீீர் வரத்து வாய்க்கால்களை சரி செய்து உடனடியாக பருவ மழை தொடங்கும் முன்பு அந்தப் பணிகளை முடிக்க மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும், என பொதுமக்களும் விவசாயிகளும் எதிர்பார்க்கிற நிலை உருவாகியுள்ளது, மேலும் இது போன்ற மழைகளின் போது பொதுமக்கள் தங்களை மிக பாதுகாப்பாக ஆறுகள் மற்றும் குளங்கள் ஏரி பகுதிகளுக்கு செல்லும்போது கவனமாகவும் மேலும் துணிகளை துவைக்கவோ. குளிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் அடிக்கடி வலியுறுத்தி வருகிறது, ஆனால் பொதுமக்கள் அதனை உதாசீனப்படுத்துவதோடு பாதிப்புகளில் சிக்கிக் கொள்கின்றனர், அதனால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு அந்தந்த ஊராட்சிகளின் சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும், மேலும் ஏரி குளம் ஆறுகள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கைகளை எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 Oct 2022 1:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  3. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  4. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  5. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  8. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  9. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!