விழுப்புரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்கு சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்கு சாவடிகளில் கலெக்டர் ஆய்வு
X

தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதற்றமான வாக்கு சாவடிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2021 முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையத்தினை, மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டருமான த.மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.ந.ஸ்ரீநாதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர். உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஜோதி. வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!