விழுப்புரம் அருகே கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

விழுப்புரம் அருகே கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி
X

ரம்யா.

விக்கிரவாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி இன்று முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார், அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தனியார் கல்லூரி முதல் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விழுப்புரம் மணி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் ரம்யா,18. விக்கிரவாண்டி தனியார் (சூர்யா) பார்மஸி கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.பார்ம் படித்து வருகிறார். இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இரண்டு முறை ஏற்கனவே மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் இன்று காலை கல்லுாரிக்கு வந்தவர் முதல்மாடியில் தனது வகுப்பு தோழிகளுடன் பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி மேலிருந்து கீழே விழுந்துள்ளார்.

உடன் அங்கிருந்த கல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் ,மாணவர்கள் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர், டிஎஸ்பிகள் அபிஷேக் குப்தா, பார்த்திபன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி மாடியிலிருந்து கீழே விழுந்த செய்தி விக்கிரவாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தற்கொலை முயற்சி காதல் விவகாரம் என ரகசியம் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டு வருவதால், போலீசார் அந்த கோணத்திலும் விசாரணையை நடத்த உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா