சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த சரக்கு பாட்டில்கள் பறிமுதல்

சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த சரக்கு பாட்டில்கள் பறிமுதல்
X

புதுவையிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த மது பாட்டில்கள் வாகனத்துடன் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தில் புதுவையிலிருந்து மதுபாட்டில்களை கடத்திவந்தது தெரிய வந்தது.

கடத்தி வரப்பட்ட 3,024 மதுபாட்டில் பறிமுதல் செய்த காவல்துறையினர், தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஓட்டுனர் வினோத் என்பவரை கைது செய்து கோட்டகுப்பம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்