காப்பீடு தொடர வேண்டும்:எம்பி வலியுறுத்தல்

காப்பீடு தொடர வேண்டும்:எம்பி வலியுறுத்தல்
X
கொரோனா கால காப்பீடு திட்டமான கரீப் கல்யாண் மருத்துவ காப்பீடு தொடர வேண்டும் எம்பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளா்களுக்காக கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட பிரதமரின் கரீப் கல்யாண் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும் என்று விழுப்புரம் மக்களவை உறுப்பினா் துரை.ரவிக்குமாா் கோரிக்கை விடுத்துள்ளார்,

இதுகுறித்து அவா் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷவா்தனுக்கு அனுப்பிய உள்ள கடிதத்தில், கடந்த ஆண்டு கொரோனா பரவலின்போது மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டனா். இவா்களை பாதுகாக்க சிறப்பு மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியது. அதன் அடிப்படையில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கான பிரதமரின் கரீப் கல்யாண் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அமல்படுத்தியது. இந்தத் திட்டம் சுகாதாரப் பணியாளா்களுக்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு செய்யும் வகையில் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், 24.03.2021-ஆம் தேதியுடன் இந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளா்களுக்கென உருவாக்கிய இந்தத் திட்டத்தை, கொரோனா இரண்டாவது அலை பரவிவரும் இந்தச் சூழலில் நிறுத்தும் அரசின் இந்த முடிவு மிகப் பெரும் அதிா்ச்சியை அளிக்கிறது.

கடந்த பிப்.3-ஆம் தேதி வரை கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட 734 மருத்துவா்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை கைவிடும் மத்திய அரசின் முடிவு மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களின் மன உறுதியை கடுமையாகப் பாதித்து, மருத்துவச் சூழலை மேலும் கெடுத்துவிடும்.

எனவே, மேற்கூறிய காப்பீட்டுத் திட்டத்தை அரசு தொடா்ந்து செயல்படுத்த வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த மருத்துவப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு இந்தத் திட்டத்தின்கீழ் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..