குவைத்தில் உள்ள மகனை மீட்க விழுப்புரம் ஆட்சியரிடம் கோரிக்கை

குவைத்தில் உள்ள மகனை மீட்க விழுப்புரம் ஆட்சியரிடம் கோரிக்கை
X

 குவைத்தில் உள்ள தனது மகனை மீட்க, தாய் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்

வானூர் அருகில் உள்ள ராயபுதுபாக்கம் பகுதியை சேர்ந்த தாய் குவைத்தில் உள்ள தனது மகனை மீட்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட மதுரா ராயப்பேட்டை இராயபுதுபக்கம் பகுதியைச் சேர்ந்த முகமது இக்பால் மனைவி மெகர் நிஷா. இவரது மகன் குவைத் நாட்டிற்கு ஓட்டுனர் வேலைக்கு சென்ற போது, அங்கு விபத்து நடந்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.

இதனால் சரியான முறையில் தங்குவதற்கு இடமின்றி, வேலை வாய்ப்பின்றி சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார், அதனால் அவரை உடனடியாக இந்திய நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெகர் நிஷா விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!