பயிர் காப்பீடு திட்டத்தை குருவை நெற்பயிருக்கும் நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைகுறுவை நெல்லுக்கும் நீட்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விவசாயிகளை ஓரளவாவது காக்கும் நோக்கத்துடன் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் குறுவை பருவ நெற்பயிர் இத்திட்டத்தில் சேர்க்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
அதைப் போக்கும் வகையில் நடப்பாண்டிற்கு ரூ.2,327 கோடி செலவில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி, நடப்பு குறுவை பருவத்தில் மக்காச்சோளம், உளுந்து, துவரை, பச்சைப் பயறு, தக்காளி, வெண்டை, கேரட், பூண்டு, இஞ்சி போன்ற பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்படும். மேற்கண்ட பயிர் வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால், நடப்பு குறுவை பருவத்தில் நெல், தட்டைப்பயறு ஆகியவற்றுக்கு காப்பீடு வழங்கப்படாது என்று அரசு அறிவித்திருப்பது உழவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெற்பயிருக்கு காப்பீடு வழங்காமல், பிற பயிர்களுக்கு மட்டும் காப்பீடு வழங்குவதால் உழவர்களுக்கு பயன் இல்லை. கடந்த காலங்களில் இல்லாத வகையில் இப்போது 5 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. எந்த நேரமும் வறட்சியோ, வெள்ளமோ தாக்கக்கூடும் என்பதால், குறுவை நெல்லுக்கு பயிர்க்காப்பீடு அவசியமாகும்.
பயிர்க்காப்பீடு செய்யப்படவில்லை என்றாலும் கூட, குறுவைப் பருவ நெற்பயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப் படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் இழப்பீட்டுடன் ஒப்பிடும் போது, பேரிடர் நிதியிலிருந்து வழங்கப்படும் இழப்பீடு மிக மிக குறைவாகும்.
கடந்த 9 ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் மட்டுமே குறுவை சாகுபடி உழவர்களுக்கு லாபம் அளித்துள்ளது. மீதமுள்ள ஆறு ஆண்டுகளில் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் கடும் இழப்பையே சந்தித்துள்ளனர். குறுவை நெல் சாகுபடி செய்வதே சூதாட்டமாக மாறி விட்ட நிலையில், காப்பீடு வழங்குவது மட்டும் தான் உழவர்கள் மத்தியில் நம்பிக்கையையும், ஆதரவையும் வழங்கும்.
எனவே, குறுவை நெற்பயிருக்கும், தட்டைப் பயிருக்கும் பயிர்க்காப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பயிர்க்காப்பீடுகளுக்கு பிரிமியம் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குப் பிறகு இரு வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu