விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் 18 வார்டில் சிபிஎம் வெற்றி

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் 18 வார்டில் சிபிஎம் வெற்றி
X

சிபிஎம் வேட்பாளர் பர்கத் சுல்தானா

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் நகராட்சியில் 18வது வார்டில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சியில் 18வது வார்டில் திமுக மதசார்பற்ற கூட்டணியில் சிபிஎம் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட ஃபர்கத் சுல்தானா, மொத்தம் பதிவான 692 வாக்குகளில் 178 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களை காட்டிலும் வெற்றி பெற்றார்.

அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் வழங்கினார். அவருக்கு விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!