வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு அறை: விழுப்புரம் கலெக்டர் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மைய  பாதுகாப்பு அறை: விழுப்புரம் கலெக்டர் ஆய்வு
X

கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அறையை ஆய்வு செய்த கலெக்டர் மோகன்.

வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஒன்றிய உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில், பாதுகாப்பு அறையை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான த.மோகன், ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு, கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் மையமான ஐ.எஃப்.இ.டி பொறியியல் கல்லூரியில் ஆய்வு செய்தார்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை (Strong Room) நேரில் சென்று பார்வையிட்ட ஆட்சியர் மோகன், வாக்கு எண்ணும் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அவருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்ரீநாதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் வெண்ணிலா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!