ஆவணங்களின்றி எடுத்து சென்ற 7 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்து சென்ற 7 லட்சம் பறிமுதல்
X

விழுப்புரம் மாவட்டம் வானூர், கண்டமங்கலம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி பைக்கில் எடுத்து சென்ற ரூ. 7 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதைத்தொடர்ந்து, வானூர் சட்டமன்ற தொகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் முருகன் தலைமையில் கண்டமங்கலம் அடுத்த கலித்திரம்பட்டு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கண்டமங்கலத்தில் இருந்து கலித்திரம்பட்டு நோக்கி மோட்டார் பைக்கில் வந்த நபரை மடக்கி, அவர் வைத்திருந்த பையை ஆய்வு செய்தனர்.

அப்போது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 7 லட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது. மேலும் விசாரணையில், அவர் விழுப்புரத்தை சேர்ந்த முத்து (72) என்பதும், தனது சொந்த வேலைக்காக புதுச்சேரிக்கு எடுத்து சென்றதும் தெரிய வந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, வானூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கணக்கு கருவூலத்துறையிடம் ஒப்படைத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!