திருவெண்ணெய்நல்லூர் அருகே தொழிலாளி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு

திருவெண்ணெய்நல்லூர் அருகே தொழிலாளி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு
X
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே கூலி தொழிலாளி வீட்டில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்கு, திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.கொணலவாடி கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 60).தொழிலாளி. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். இதைநோட்ட மிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள், அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.12 ஆயிரம் மற்றும் 2 பவுன் நகையை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் உதவி ஆய்வாளர் அசாரூதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!