திருவெண்ணெய்நல்லூர் அருகே புதிய குளம்: ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இளந்துறை ஊராட்சியில் புதிதாக வெட்டப்பட்டு வரும் குளத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது இளந்துறை ஊராட்சி இங்கு ஊரக வளர்ச்சி துறை மூலம் அம்ரித் சர்வோர் திட்டத்தின் கீழ் இரண்டு புள்ளி 50 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 6.75 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குளம் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது,அதனை மாவட்ட ஆட்சியர் மோகன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்திட்டத்தின் கீழ் எட்டு குளங்கள் என 13 ஊராட்சி ஒன்றியங்களில் 104 குளங்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ஊராட்சி பகுதிகளில் நீர் ஆதாரம் பெருகி பாதுகாப்புடன் விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கும் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. ஆகவே பருவ மழை காலம் தொடங்க உள்ளதால் மழை நீரை சேமிக்கும் வகையில் குளம் வெட்டும் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும். மேலும் குளத்தின் கரையோர பகுதிகளில் மரங்களை நட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu