விழுப்புரம் மாவட்டத்தில் சிபிஎம் வாக்கு சேகரிப்பு

முகையூர் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினரின் தேர்தல் பிரசாரம்
விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேட்பாளராக மாவட்ட குழு உறுப்பினர் உமாமகேஸ்வரி போட்டியிடுகிறார். வீரபாண்டி ஊராட்சியில் அவரை வேட்பாளராக அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பு கூட்டம் கிளை செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது,
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஆர்.ராமமூர்த்தி,மாவட்ட செயலாளர் என்.சுப்பரமணியன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.வேல்மாறன், மாவட்ட குழு உறுப்பினர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.அப்போது வீரபாண்டி ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலராக போட்டியிடும் சிபிஎம் கட்சி வேட்பாளர் உமாமகேஸ்வரிக்கு சுத்தி அறிவாள் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu